சூர்யா சார் என்னை மிகவும் ஊக்குவித்து, இன்று சிறப்பாக ‘தி ஒன்’ (The One) பாடலை வெளியீடு செய்ய உள்ளோம். இப்பாடலை நான் சூர்யா சாரின் ரசிகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
நடிகை மமிதா மிகவும் எளிமையான நபர். அவருடைய அன்பின் காரணமாகவே பலர் அவருடைய நடனத்தை மீண்டும் செய்து பார்க்க முயற்சிக்கின்றனர்.
ராதிகா மேடத்திற்கும் சுரேஷ் அவர்களுக்கும் நன்றி. சுரேஷ் சாரின் ரசிகர்கள் தவறாமல் உங்கள் குடும்பத்துடன் வந்து, இந்தத் திரைப்படத்தை உற்சாகத்துடன் திரையரங்கில் கண்டு களியுங்கள்.
எனது பாடலாசிரியர்கள் அருண் ராஜா, கென், பாலாஜி, வேணுகோபால் மற்றும் காதர் ஆகிய அனைவருக்கும் நன்றி. கடந்த 25 ஆண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தான். நான் இசையமைத்த ‘சைவம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே’ பாடலுக்காக அவர் தேசிய விருது பெற்றார்.
பாடும் திறனால் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் சங்கர் மகாதேவன். இசைத்துறையில் எனது முன்மாதிரி (Icon) எப்போதும் ஏ.ஆர். ரஹ்மான் சார் தான். நான் எந்த விருது பெற்றாலும் அவர்தான் முதன்முதலில் எனக்கு வாழ்த்திப் பதிவிடுவார்.” என்றார்.