“Welcome them immediately”: 25 Congress MLAs in Karnataka ready to join BJP-உடனே அழைத்துக்கொள்ளுங்கள்: ‘கர்நாடகாவில் 25 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜகவில் சேர தயாராக இருக்கிறார்கள்’

Spread the love

கர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. தற்போதும் அது போன்ற ஒரு முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களிடம், ஸ்டிங் ஆபரேஷன்கள் மூலம் சிக்கவைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறினார். தான் முதலமைச்சராக ஆனதில் இருந்து ஸ்டிங் ஆபரேஷன்களில் சிக்கவைக்க முயற்சி நடக்கிறது. தனது குற்றச்சாட்டுக்கு தன்னிடம் போதிய ஆதராம் இருக்கிறது. நான் மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இதைச் செய்கிறார்கள். அது எனக்குத் தெரியும். இதை யார் செய்கிறார்கள்.

இதற்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி/காட்ஃபாதர், யார் நிதியளிக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்போது அதையெல்லாம் பற்றி நான் பேச வேண்டிய அவசியமில்லை.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

விஜேந்திரா

விஜேந்திரா

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கனிகா ஒரு பென் டிரைவைக் காட்டி, மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜக தலைவரும் ஸ்டிங் நடவடிக்கைகளுக்கு நிதியளிதந்தற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறினார். ஒரு வாரத்தில் ஆவணங்களை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தற்போது தேர்தல் நடந்தால், கேபினட் அமைச்சர்கள் உட்பட 25 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களது கட்சியில் சேருவார்கள் என்று கர்நாடக பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா கூறினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,”‘எங்களுக்கு அத்தகைய தேவை (எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க) இல்லை. ஆனால் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்வேன். நாளை தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், டி.கே. சிவகுமார் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் உட்பட 25 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைவார்கள். அத்தகைய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது” என்று விஜயேந்திரர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஸ்டிங் ஆபரேஷன் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு பதிலளித்த விஜயேந்திரர், கர்நாடக அரசியல் இவ்வளவு கீழ் நிலைக்கு ஒருபோதும் மோசமடையவில்லை. மாநிலத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் அரசியல்வாதிகள் மீதான பொதுமக்களின் மதிப்பைக் குறைத்து இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள கர்நாடகா முதல்வர் சிவக்குமார்,”எந்தத் தாமதமும் இன்றி வரும் தலைவர்களை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளட்டும். முதலில் அவர்களை உங்களது கட்சியில் சேரச் சொல்லுங்கள். தாமதிக்க வேண்டாம்,” என்று சொன்னார். ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தது யார் என்றும், இதற்கு விஜயேந்திரா மற்றும் குமாரசாமியால் பதில் சொல்ல முடியவில்லை என்றும், அவர் (விஜயேந்திரா) நேரத்தை வீணாக்காமல் வரும் காங்கிரஸ் தலைவர்களை தங்களது கட்சியில் சேர்க்கட்டும்.”என்று கூறினார். சிவக்குமார் தான் சொல்லும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தராமல் இருப்பதாக குமாராசாமி குற்றம் சாட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *