யூடியூப் நிறுவனம் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு YouTube Partner Program தகுதி விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, விளம்பரங்கள் மற்றும் யூடியூப் பிரீமியம் மூலம் வருமானம் ஈட்ட புதிய படைப்பாளிகள் கடுமையான இலக்குகளை எட்ட வேண்டியிருக்கும்.
புதிய அறிவிப்பின்படி, புதிய படைப்பாளிகள் கடந்த ஓராண்டில் 8,000 மணிநேரப் விவ்ஸ் (Watch hours) பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாட்களில் 20 மில்லியன் ஷாட்ஸ் (Shorts) விவ்ஸ் கடந்திருக்க வேண்டும். இவை இரண்டும் தற்போதுள்ள 4,000 மணிநேரப் விவ்ஸ் மற்றும் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் என்ற அளவுகோல்களை விட இரண்டு மடங்காகும்.
அதேவேளையில், குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் (Subscribers) இருக்க வேண்டும் என்ற விதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த புதிய விதி பாதிப்பை ஏற்படுத்தும். ஷாட்ஸ் வீடியோக்கள் மூலம் தொடர்ச்சியாக விளம்பர வருமானம் பெற, அவர்கள் 90 நாட்களில் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் தக்கவைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.