ஃபிளைதுபாய் விமானத்தில் கத்தி அல்ல.. கோடாரியால் தாக்கப்பட்ட ஸ்மித் மச்சார்|Not a Knife? The Axe Inside Flydubai’s Cockpit Explained

Spread the love

ஃபிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமனைச் சேர்ந்த விமானியான ஹமாம் அல்ஹமாமி கத்தியால் குத்தினார் என்று முன்பு கூறப்பட்டது.

விமானத்திற்குள் அதுவும் காக்பிட்டிற்குள் எப்படிக் கத்தி அனுமதிக்கப்பட்டது என்கிற கேள்வி பரவலாக எழுந்தது.

கத்தி அல்ல…

தற்போது கிடைத்த தகவலின்படி, ஹமாம் அல்ஹமாமி, ஸ்மித் மச்சாரைக் கத்தியால் தாக்கவில்லை… அவசரகாலக் கோடாரி தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

விமானத்திற்குள் எப்படி கோடாரி?

இந்தத் தகவலை ஐக்கிய அரபு அமீரகத் தரப்பு தெரிவித்திருக்கிறது.

ஹமாம் அல்ஹமாமி

ஹமாம் அல்ஹமாமி

சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி, அவசரகாலக் கோடாரி ஒவ்வொரு வணிகப் பயணிகள் விமானத்திலும் கட்டாயம் இருக்க வேண்டும்.

விமான விபத்து போன்ற அவசரநிலைகளின்போது பயன்படுத்துவதற்காக இது காக்பிட்டிற்குள் வைக்கப்படுகிறது.

முன்னதாக, இந்தக் கோடாரிகள் பிரதான பயணிகள் அமரும் பகுதியில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், அமெரிக்காவில் நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இவை காக்பிட்டிற்குள் மாற்றப்பட்டன.

அவசர காலத்திற்காக வைக்கப்பட்ட கோடாரியை எடுத்து ஸ்மித் மச்சாரை அல்ஹமாமி தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *