நேபாள வெள்ளம்: இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் இழப்பீடு கோரிக்கை|Nepal Targets China, US and India Over Climate Damage

Spread the love

கடந்த வாரம் (ஆகஸ்ட் 26), பனிப்பாறை சரிவினால் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் பேரிடருக்குக் காரணம் இந்தியா, சீனா, அமெரிக்கா தான் என்று நேபாளம் குற்றம் சாட்டுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேபாளப் பெருவெள்ளம் குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் பேசியுள்ளார்.

ஷிசிர் கானல், “நேபாளம் பசுமைக்குடில் வாயுக்களை மிகக் குறைவாகவே வெளிப்படுத்துகிறது.

இருந்தும், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளான பனிப்பாறைகள் அதிவேகமாக உருகுவது மற்றும் மலைப்பகுதிகளில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை அது அளவுக்கு அதிகமாக எதிர்கொண்டு வருகிறது.

நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல்

நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல்

இதனால், நேபாளம் தனது சர்வதேசத் தூதரக அணுகுமுறையை ‘உதவி கேட்பதில்’ இருந்து ‘நீதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு’ மாற்றியமைக்க உள்ளது.

இது ஏதோ தொண்டு அல்லது தர்மம் சார்ந்த விஷயம் அல்ல. இது சட்டப்பூர்வ மற்றும் தர்மநெறி சார்ந்த கடமை.

உலகிலேயே அதிகளவு பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் சீனாவிற்கும், இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவிற்கும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவிற்கும் வரலாற்று ரீதியான பொறுப்பு உள்ளது.

பெரு நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மற்றும் தொழில் வளம் மிக்க நாடுகளும் நேபாளம் போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *