அட்சய திருதியை: வீட்டில் குபேரநிதி குவிந்திட நாம் செய்யவேண்டிய 6 வழிபாடுகள்… முழுமையான வழிகாட்டல்! | 5 essential worship rituals to perform on Akshaya Tritiya

Spread the love

4. கண்ணன் வழிபாடு

இந்த நாளில் கண்ணன் திருநாமங்களைச் சொல்லி வணங்குவ தால், நம் வீட்டில் சுபிட்சம் பெருகும். அஸ்தினாபுரம் அவையில் திரெளபதி துகிலுரியப்பட்டாள்.

அப்போது அவள் `சங்கும் சக்கரமும் ஏந்தியவனே, துவாரகாவில் நிலையாக வசிப்பவனே, கோவிந்தா, தாமரைக் கண்களை உடையவனே காப்பாற்று… சரணடைந்தேன் உன்னையே’ என்று பொருள்படும் ஸ்லோகத்தைச் சொல்லி கண்ணனை வழிபட்டாள்.

கண்ணனின் அருளால் மானம் காக்கப்பெற்றாள். இந்த நிகழ்வு நிகழ்ந்த தினம் அட்சய திரிதியை. அன்று, கண்ணனின் நாமத்தை உச்சரித்து வழிபாடு செய்தால் நமது இல்லத்திலும் கண்ணனின் திருவருள் பெருகும்.

கோவிந்தா போற்றி

கோபாலா போற்றி

அச்சுதா போற்றி

வாசுதேவா போற்றி

பார்த்த சாரதியே போற்றி

மாதவா போற்றி

ஶ்ரீதரா போற்றி

ஜனார்த்தனா போற்றி – என்று போற்றிச் சொல்லி துளசியார் அர்ச்சித்து வழிபடுவது விசேஷம்.

கௌரி விரதம்

கௌரி விரதம்

5. புதுக் கணக்கு – புது முயற்சிகள் செய்யலாம்

அட்சயம் என்றால், ‘வளருதல்’ என்று பொருள். இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும், புதுமுயற்சிகளைத் தொடங்கினாலும் சிறப்புதான். அன்று புதுக்கணக்கு ஆரம்பம், கல்வித் துவக்கம், விரதம், தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்வது உத்தமம்.

6. கெளரி வழிபாடு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள்.அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவ தாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகர் வருவதாகவும் ஐதிகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *