அண்ணா சாலை: நடைபாதை ஆக்கிரமிப்பும், அறுந்து கிடக்கும் ஒயர்களும் – சிரமத்தைச் சந்திக்கும் மக்கள்! | Anna Salai Footpath Woes: Encroachments and Dangling Wires Make Walking a Daily Hazard

Spread the love

தரை எங்கும் கேபிள் ஒயர்கள்:

ஆக்கிரமிப்புகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகப் பகுதிகளில் உள்ள முக்கிய நடைபாதைகளில் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து, ஆபத்தான முறையில் தரையில் கிடக்கின்றன.

பொதுமக்கள் தினமும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயமான இப்பாதையில், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, இவ்வழியே செல்வோர் இந்த ஒயர்களைக் கவனிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேறு வழியின்றி இந்த ஒயர்களை மிதித்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படி ஒயர்கள் சிதறிக் கிடப்பது அவசியமற்ற ஒன்றாகவும், விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும் காணப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை : ஆபத்து இல்லை என்றாலும், பொதுமக்கள் தடையின்றி இயல்பாக நடந்து செல்ல முடியாமல் தினமும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், கடைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

எனவே, சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக இப்பகுதியைப் பார்வையிட்டு, நடைபாதையில் ஆபத்தாகக் கிடக்கும் கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். மேலும், நடைபாதை ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தி, பொதுமக்கள் எவ்விதத் தடங்கலும் இன்றி, பாதுகாப்பாகவும் தாராளமாகவும் நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

– சுபிக்ஷா ஆ, சுதா கா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *