
சட்டமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக தவெக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருந்த போதிலும் ஆட்சி அமைக்க மேஜிக் எண் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்பதால் ஆளுநர் விஜய்யை முதல்வராக பதவியேற்க அழைக்கவில்லை. அதுமட்டுமின்றி 118 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அதிமுக, திமுக இணைந்து வந்தால் அவர்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பேன் என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றைய திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக மா.கம்யூ, இ.கம்யூ கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில், திமுக அவசரு ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடதக்கது.