அதிமுக: இன்று நடைபெற இருந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்தா? | AIADMK MLAs’ meeting that was scheduled to be held today been cancelled?

Spread the love

அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

தவெக விஜய்

தவெக விஜய்

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதனால் தவெக அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்தச் சூழலில் தான் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை சென்னைக்கு வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்புவிடுத்திருந்தார்.

அந்தவகையில் இன்று காலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் திடீரென ரத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்க்கு ஆதரவு அளிப்பதில் கருத்து முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *