அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் ? GK Vasan’s Tamil Maanila Congress exits NDA

Spread the love

வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற கோட்பாட்டுடன் மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸை 2014ம் ஆண்டு மீண்டும் கட்டமைத்தார் ஜிகே வாசன். ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் என பல காங்கிரஸ் தலைவர்கள் அவர் பின்னால் அன்று சென்றாலும், நாளாக நாளாக ஒவ்வொருவராக வெளியேறினர்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்ததும் பல மாநில மாவட்ட நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினர். கட்சியின் மாநில பொதுசெயலாளர் யுவராஜாவும் விரைவில் தவெகவில் இணைகிறார்.

இந்நிலையில் அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜிகே வாசன் வெளியேறும் நிலையில், காங்கிரஸ் இல்லாத தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியை நோக்கி ஜிகே வாசன் நகர்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *