தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி – சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொரடாவுக்கு எதிராக தவெக-வுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் சிலர் வாக்களித்தது கட்சிக்கு எதிரான பெரும் துரோகமாகும். பதவிக்காக தவெக பக்கம் சேர்ந்திருக்கிறார்கள். அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். ஆனால், பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்யக் கூடாது.

கழகத்திற்குத் துரோகம் இழைத்துள்ளவர்கள், தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, என்மீது பல்வேறு அவதூறு கருத்துகளை, பழி பாவங்களைச் சுமத்தி வருகின்றனர். இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், எஸ்.பி.வேலுமணி தன் எக்ஸ் பக்கத்தில், “கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.