அதிரடியாக குறைந்த தங்கம் விலை…இன்று விலை எவ்வளவு தெரியுமா? – Kumudam

Spread the love

தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்களாகவே இறக்கத்தை கண்டு வரும் நிலையில், இன்றும் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், நேற்று முன்தினம் (அக்.,-13) தங்கம் விலை சவரனுக்கு ரூ 280 குறைந்து 1.09.480க்கும், கிராமுக்கு ரூ 35 குறைந்து ஒரு கிராம் ரூ 13,685க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து நேற்றும் (அக்.,-14)  சவரனுக்கு ரூ 760 குறைந்து ஒரு சவரன் ரூ 1,08,720க்கும், கிராமுக்கு ரூ 95 குறைந்து ஒரு கிராம் ரூ 13,590க்கும் விற்பனையானது. வெள்ளி விலை எந்தவொரு மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,45,000க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்களாகவே குறைந்து வந்த நிலையில், இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 குறைந்து ஒரு சவரன் ரூ 1,08,120க்கும், கிராமுக்கு ரூ 75 குறைந்து ஒரு கிராம் ரூ 13,515க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு 5000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *