Venezuela: வெனிசுலா இரட்டை நிலகநடுக்கம்; இடிந்து விழுந்த கட்டிடங்கள்; அவசர நிலை அறிவித்த அதிபர்! | A powerful double earthquake has struck Venezuela.

Spread the love

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினரும் தன்னார்வலர்களும் இடிபாடுகளை அகற்றி, உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லா குவைரா பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றும் முற்றிலுமாக சிதைந்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான இந்த இயற்கை பேரிடரைத் தொடர்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

வெனிசுலா நிலநடுக்கம் - 2026

வெனிசுலா நிலநடுக்கம் – 2026

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், “பொதுமக்கள் அனைவரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ கூறுகையில், “நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், அடுத்தடுத்து வரக்கூடிய நிலநடுக்க அதிர்வுகளுக்கு அவை இடிந்து விழ வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அனைவரும் திறந்தவெளியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *