அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு… நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனின் கடிதம்!| a letteron on voters’ dissatisfaction regarding recent tamilnadu politicians’s dirty politics

Spread the love

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களே..

“வழக்கத்தைத் தாண்டி இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா ஏமாந்துட்டோமோ’ங்கிற ஆதங்கத்துடன் உங்களுக்கு ஓட்டுப் போட்ட வாக்காளன் வரையும் மடல் இது.

‘யோக்கியன் வர்றான் செம்பெடுத்து உள்ள வை’னு ஒரு சொல்லாடல் தமிழ்ல உண்டு. ‘அயோக்கியன் இல்லையே, அப்புறம் எதுக்கு செம்பை எடுத்து உள்ள வைக்கணும்’னு யாராவது எப்பவாவது கேட்டிருப்போமா?

ஒரே வாக்கியத்துல பாசிடிவாகவும் நெகடிவாகவும்.. வாவ்’ங்கிறவங்க‌ தமிழின் வளமை தெரிஞ்சவங்க. ‘பாராட்டவும் செய்யணும், திட்டவும் செய்யணும், அவ்ளோதான் இதோட அர்த்தம்.

சரி, விஷயத்துக்குப் போயிடலாம்.

ஓட்டுப் போட்டு உங்களையெல்லாம் தேர்ந்தெடுத்துட்டோம். அதனால பாராட்டாம இருக்க முடியாது. அதேநேரம் தேர்தல் முடிவு வந்ததுல இருந்து இந்தப் பத்து நாளா நீங்க நடந்துக்கிடறதையெல்லாம் பார்த்தா கொதிக்கவும் செய்யுது. அதனால எளிதாகக் கடந்து போகவும் முடியலை.

மீடியா, சோஷியல் மீடியானு எந்தப் பக்கம் போனாலும், ‘அவர் அந்தப் பக்கம் போயிட்டார்’, ‘இவர் இந்தப் பக்கம் போயிட்டார், ‘நாங்கதான் ஒரிஜினல்’, ‘எங்களுக்கே அதிகாரம்’.. இப்படி ஏக கரைச்சல், சகிக்கல, எரிச்சல், ஆத்தாம, கோபம், இன்னும் என்னென்னவோ வருது.

ஒருத்தராச்சும் போன மாசம் மக்கள்கிட்ட போய் என்ன பேசினோம், இன்னைக்கு என்ன பேசிட்டிருக்கோம்னு நினைச்சுப் பார்க்கிறீங்களா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *