அபிஜித் தீப்கே கையில் எடுக்கும் அடுத்த போராட்டம்… தேர்தல் ஆணையரை பதவி விலக வைக்குமா? – Kumudam

Spread the love

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியானதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று (24.09.2026) அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஞானேஷ் குமார் நாளைக்குள் பதவி விலகவில்லை என்றால், சிஜேபி சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி மும்பையில் போராட்டம் தொடங்கப்படும் என்று அபிஜித் தீப்கே இன்று அறிவித்துள்ளார்.

மேலும், மும்பையில் தொடங்கும் போராட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், காந்தி ஜெயந்தி அன்று ஜனநாயகத்தைக் காக்க நாம் உறுதியேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, “இந்தியாவில் தேர்தல்கள் முறைகேடாக நடத்தப்படுகின்றன. ஆனால், முறைகேடுகள் நிறைந்த இந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அந்த தேர்தல்களுக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள். தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்” என்று அபிஜித் தீப்கே பதிவிட்டிருந்தார்.

மேலும் நீட் வினாத்தாள் கசிவு எதிர்த்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை எடுத்து யாரும் அசைக்க முடியாத ஒன்றிய அரசை கரப்பான் பூச்சி தலைவர் அப்ஜித் தீப்கே அசைத்தார் என்பது அன்று பரபரப்பாக பேசப்பட்ட வந்த நிலையில்,தற்போது தேர்தல் ஆணையத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டத்தை கையில் எடுக்க உள்ளோம் என்று அறிவித்திருக்கும் நிலையில், இந்த போராட்டத்தில் சிஜேபியினர் வெல்லுவார்களா? தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகல் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *