தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: “காவலரின் தங்க செயின் பறிப்பு” – சம்பவத்தை விளக்கும் காவல்துறை | Theni Jail Prisoners Escape: Policemen Suspended, Police Explain

Spread the love

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில், நேற்று (அக்டோபர் 26 ஆம் தேதி) இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார்.

தேனி மாவட்ட தக்கம்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறையில் 17 கைதுகள் சிறைகாவலர்களைத் தாக்கி தப்பியதில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் எஞ்சி உள்ள 13 பேரை தேனி, திண்டுக்கல், கேரளா ஆகிய பகுதிகளில் 10 தனிப் படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், “தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறைச்சாலையில் அக்டோபர் 26-அன்று இரவு சுமார் 10:50 மணியளவில் மதன்மோகன்- முதன்மைத் தலைமை வார்டன், ஸ்டாலின் பிரபு- மூன்றாம் மற்றும் நான்காம் பிளாக், பிரபு-கணினி பிரிவு, தங்கப்பாண்டி -பிரதான நுழைவாயில் ரமேஷ் 1 மட்டும் 2 -ம் பிளாக் ஆகியோர் இரவுப் பணியில் சிறை காவலர்களாகப் பணியில் இருந்துள்ளனர்.

தேனி சிறை

தேனி சிறை

சிறைகைதிகள் இச்சம்பவத்தின்போது சிறைச்சாலையின் மூன்றாம் ப்ளாக்கில் 92-விசாரணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் முத்து இளங்கோவன் என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற சிறைவாசிகள் கூச்சலிட்டதால் அங்கு பணியில் இருந்த காவலர் ஸ்டாலின் பிரபு மற்றும் முதன்மைத் தலைமை வார்டன் மதன்மோகன் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார்.

பின்பு அங்கிருந்த விசாரணை சிறைவாசிகள் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள போர்வையைப் பயன்படுத்தி சிறைகாவலர் ஸ்டாலின் பிரபு, முதன்மைத் தலைமை வார்டன் மதன் மோகன் ஆகியோரைத் தாக்கிவிட்டு அறைக்குள் தள்ளிவிட்டு அதனைத் தொடர்ந்து மூன்றாம் பிளாக்கின் கதவைத் திறந்து சிறைவாசிகள் பிரதான நுழைவாயில் நோக்கி ஓடியுள்ளனர்.

இதற்கு சக கைதிகளான மீனாட்சி சுந்தரம், திருப்பதி, கருப்பசாமி ஆகியோர் உதவி இருக்கிறார்கள்.

பின்னர் சுமார் 11:05 மணிக்குப் பிரதான நுழைவாயில் தாழ்பாலைத் திறந்து 17- சிறைவாசிகள் சிறைச்சாலையை விட்டு தப்பித்து சென்றிருக்கிறார்கள். தப்பிச் செல்லும்போது தலைமை வார்டன் மதன் மோகன் அணிந்திருந்த சுமார் ஒன்றை பவுன் தங்கச் சங்கிலி பறித்து சென்றிருக்கிறார்கள்.

தாக்குதலில் காயமடைந்த சிறை காவலர் தங்கப்பாண்டி தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *