“அவர் அப்போது என் காதலி; இப்போது என் தோழி!” – காதல் நினைவுகளைப் பகிர்ந்த ராகுல் காந்தி | Rahul Gandhi reveals he visited the place where his parents first met

Spread the love

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் தனது பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் கேம்பிரிட்ஜில் உள்ள வர்சிட்டி உணவகத்திற்குச் செல்ல விரும்பியதை அவர் நினைவு கூர்ந்தார், அந்த உணவகம் அவரது பெற்றோர் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மாணவர்களாக இருந்தபோது முதன் முதலில் சந்தித்துக்கொண்ட இடம்.

“எனது பெற்றோரின் காதல் மலர்ந்த இடத்தைப் பார்க்கும் ஆர்வத்தில், செயின்ட் ஆண்ட்ரூஸ் தெருவில் உள்ள அந்த உணவகத்திற்கு எனது அப்போதைய காதலியை அழைத்து சென்றேன். உணவகத்தின் மஞ்சள் நிறக் கதவைத் திறந்து உள்ளே சென்று அமர்ந்தோம். உணவகத்தில் அமர்ந்து உணவுப் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எனது பெற்றோர் இங்குதான் சந்தித்தார்கள் என்று பணியாளரிடம் சாதாரணமாகக் கூறினேன்.

அதற்கு அந்தப் பணியாளர் உடனடியாக என்னைப் பார்த்து, “ஓ, அந்த இருவரா? நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் துல்லியமாகத் தெரிகிறது’ என்று பதிலளித்தார்” என்றார்.

பின்னர், அந்தக் காதலியைப் பற்றி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டபோது, அவர் இப்போது எனக்கு ஒரு நண்பர் என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எனது பெற்றோர் அந்த உணவகத்தைப் பற்றி எப்போதும் பெருமையாகப் பேசியிருந்தாலும், உணவின் சுவையில் எங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவமே கிடைத்தது. பணியாளரின் பரிந்துரையின் பேரில், இரண்டு தட்டு சிக்கன் சாஸர் ஆர்டர் செய்தோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *