நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் “லெனின்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர் தமிழில் ‘காந்தா’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ‘லெனின்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றிருக்கிறார் பாக்யஸ்ரீ போர்ஸ். அப்போது தனது சிறுவயதில் நடந்த கசப்பான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரிலுள்ள ஒரு மராத்தி வழிப் பள்ளியில் படித்த பாக்யஸ்ரீ, அவரது தந்தையின் வேலை காரணமாக குடும்பத்துடன் நைஜீரியாவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.
அங்கு சென்றபோது அவருக்கு ஆங்கிலம் தெரியாமல் மராத்தி மற்றும் இந்தி மட்டுமே தெரிந்திருக்கிறது. இதனால் அங்கிருந்த பிற இந்திய வம்சாவளி குழந்தைகள் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு ஆங்கிலம் தெரியாததால் கிண்டல் செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்துகொண்ட அவர், “அந்த சமயத்தில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. எனக்கு மராத்தி மற்றும் இந்தி மட்டும்தான் தெரியும்.