“ஆட்சி அமைக்க பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய விஜய்”… போட்டுடைத்த கோவை சத்யன்! – Kumudam

Spread the love

நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் போட்டியிட்டார். ஆனால், மே 4ஆம் தேதி யாரும் எதிர்பாராத முடிவை தமிழ்நாடு சந்தித்தது. அரை நூற்றாண்டு கால திராவிட அரசியலை உடைத்து  யாரும் எதிர்பாராத திருப்பத்தை மே 4ஆம் தேதி தமிழ்நாடு சந்தித்தது. அப்படி, அனைத்து கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, ஆட்சி அமைக்க தேவையான இடங்களில்  118 இடங்களில் 108 இடங்களைப் பெற்று அதிக பெரும்பான்மையுடன் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது.

ஆனால், இதில் என்ன சிக்கல் என்றால், தவெக ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை தேவைப்பட்டதால், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் நேடியாக ஆதரவு கோரியது. அதிமுக கூட்டணி கட்சிகளிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளயாகின. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைத்தது. இதனிடையே இரு துருவங்களாக இருந்த அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானதோடு இதனை திமுக கூட்டணி கட்சிகள் உறுதிபடுத்தின.

உறுதிப்படுத்தியது மட்டுமில்லாமல் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை பொதுவெளியில் கூறின.அதோடு அதிமுகவை சேர்ந்த சிவி சண்முகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களுடன் தகவலை உறுதிப்படுத்தின.  இது குறித்து திமுகவோ,அதிமுகவோ எந்த மறுப்பு தெரிவிக்காததால் இத்தகைய பேச்சுவார்த்தை நடத்திருக்குமோ என்ற சந்தேகம் இன்றளவும் தொடர்கிறது.

இந்நிலையில், தவெக ஆட்சி அமைத்து 100 நாட்கள் கடந்த நிலையிலும் இந்த சந்தேகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தவெக திமுக கூட்டணியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் யாருடன் முதன்முறையாக பேச்சுவார்த்தை ஈடுப்பட்டது என்பது குறித்து ரகசியம் உடைத்துள்ளார் அதிமுகவை சேர்ந்த கோவை சத்யன்.

அண்மையில் தனியார் ஆங்கில ஊடகம் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கோவை சத்யன் தவெகவின்பெலிக்ஸ் ஜெரால்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பாட்டார். அப்போது ஆட்சி அமைத்ததை தொடர்பாக பேசிய கோவை சத்யன் இந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க பாஜகவின் ஆதரவைக் கோரியதாக புதிய தகவல் ஒன்றையும் கோவை சத்யன் வெளியிட்டார். இதுகுறித்து பேசிய அவர், சிம்.எம்.விஜய் யாரிடம் பேசுனாரு?  என்ன பேசுனாருனு நான் சொல்லுட்டுமா? யார் முன்னாடி பேசுனாரு எவ்வளவு நம்பர்ஸ் கேட்டாருனு நான் சொல்லுட்டுமா? “மே 6ஆம் தேதி என்ன நடந்தது என்று நான் சொல்லட்டுமா? ” என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒரு நல்ல மாணவன் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுப்பான். ஓரளவு படிக்கும் மாணவன் ஓரளவு மதிப்பெண் எடுப்பான். ஆனால், எதுவும் தெரியாத மாணவன் 100 மார்க் எடுத்தது போலத்தான் தவெக ஆட்சி 100 மதிப்பெண் எடுத்துள்ளது” எனக் கூறினார்.

கோவை சத்யன் மே 6 ஆம் தேதி என்ன நடந்தது என்று கேட்டிருப்பது? அப்படி என்னதான் 6 ஆம் தேதி நடந்திருக்கும் என்று அனைவரும் கேள்வி எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *