ஆன்லைனில் ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகை ஃபரியா அப்துல்லா பதிலடி! | Faria Abdullah Breaks Down Over Bonalu Trolling: Hits Back at Trolls!

Spread the love

டோலிவுட்டில் “ஜதி ரத்னாலு’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹைதராபாத்தில் நடந்த பாரம்பரிய போனாலு திருவிழாவில் கலந்துகொண்டதற்காகச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று, ஹைதராபாத்தில் உள்ள திருக்கோயில் ஒன்றில் ஃபரியா, தலையில் ‘போனம்’ சுமந்து, தப்பு மேள இசைக்கு நடனமாடி நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட அவர் ஒரு இந்து மதப் பண்டிகையில் கலந்துகொண்டிருக்கிறார் என விமர்சித்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து ஃபரியா அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *