ஆஸ்திரேலிய அபகரித்த சோழர் கால சாமி சிலைகள்.. இந்தியா வருகிறது.. மோடி அடித்த சிக்சர் | Australia to return 3 ancient Tamil Nadu sculptures including Nandi,Bhadrakali and Murugan after the PM Modi visit

Spread the love

International

oi-Nantha Kumar R

கான்பெர்ரா: பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடக்கும் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தான் ஆஸ்திரேலியா அபகரித்து வைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த பழங்கால பொக்கிஷங்களான நந்தி, பத்ரகாளி மற்றும் 6 முகம் கொண்ட முருகன் சிலையை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் உள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நல்ல உறவு உள்ளது. யுக்தி சார்ந்த நடவடிக்கையில் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

australia-to-return-3-ancient-tamil-nadu-sculptures-including-nandi-bhadrakali-and-murugan-after-the

இந்நிலையில் தான் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான யுக்தி சார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 3வது வருடாந்திர உச்சி மநாடு ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தலைமை வகிக்கிறார். இதில் தான் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடி – ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டனர். பிறகு தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு துறை, கனிமங்கள், இண்டர்நெட், தொழில்நுட்பம், விண்வெளி, சிவில் அணுசக்தி,எரிசக்தி உள்பட பல்வேறு விவகாரங்களில் இன்னும் உறவை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய கலாசார சின்னங்கள் மற்றும் கலை பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா முன்வந்தது. அதன்படி ஆஸ்திரேலியாவிடம் இருக்கும் தமிழ்நாட்டை நந்தி கல் சிற்பம், பத்ரகாளியின் உருவம் பொறித்த உலோகத்தால் ஆன திரிசூலம் மற்றும் 6 முகங்களைக் கொண்ட முருகன் (கார்த்திகேயா)கல் சிலை உள்ளிட்டவற்றை இந்தியா கொண்டு வர ஒப்புக்கொள்ளப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *