இசை ராஜ்ஜியமும், திரை காவியமும்..! | இளையராஜா – மணிரத்னம் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு | The Ilaiyaraaja Mani Ratnam Era

Spread the love

அக்னி நட்சத்திரம்.

நேர்மையான அரசு அதிகாரி.. அவருக்கு இரண்டு மனைவிகள் அவர்களின் பிள்ளைகள்.. அவர்களுக்கு இடையே விரோதமும் குரோதமும்.. எப்பப் பாரு முறைத்துக் கொண்டே…   

துள்ளலான/இயல்பான இரண்டு கதாநாயகிகள்.

“என்ன அசிஸ்டன்ட் கமிஷனர்ஸார் தள்ளிவிட்டு வந்துட்டீங்களா?”என்ற அமலாவின் குறும்பு ஒரு பக்கம் என்றால் 

செருப்பிற்கு தரையில் அழுத்தம்கொடுத்து ஸ்டைலாக நடந்து முடியை பின்னுக்குத் தள்ளி

கார்த்திக்கின் வீட்டிற்குள் நுழைந்து ,’நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை கைவிட்டு விடாதே’

 என்று சொல்லிவிட்டு அதே வேக நடையில் வெளியேறும் நிரோஷாவின்‌திமிரான அழகு காதல் மறு பக்கம்.

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்.

” ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” என்ற அட்டகாசமான பாடல் ரயில்வே ஸ்டேஷனில் அதகளமான இசையில்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்…(

“நின்னுக்கோரி வர்ணம்’ பாடலின் இடையில் அழகாய் ட்ரம் பீட்… மனதை கொள்ளை கொள்ளும்.

வா வா.. அன்பே அன்பே… கார்த்திக் நிரோஷாவின் நெருக்கத்தை இசையின் மூலம் உணர்த்துவார் இசைஞானி.. 

. மணிரத்தினம் அவர்களின் ஸ்டைல் 

படம் முழுவதும் நிரம்பி வழியும்.

‘அக்னி நட்சத்திரம் …எப்பவும் குளிர்ச்சி.

தளபதி

இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் ஒரு புதிய படத்தை பார்த்து ரசிப்பது போலவே இருக்கும்.. நட்புக்கு புது இலக்கண வகுத்த திரைப்படம்..”

 நண்பேண்டா” என்ற வார்த்தையைச் சொல்லும்போது(தே) ஒரு தனி கம்பீரம் வரும்.

“. யமுனை ஆற்றிலே பாடல்”… தனித்துவம் பெற்றது. இந்தப் பாடலை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? பாடலின் லொகேஷன் ,சூப்பர் ஸ்டாரின் மாஸ் ரியாக்ஷன், ஷோபனாவின் வாயசைப்பு மிக நேர்த்தியான இசை.,எளிமையான பாடல் வரிகள்..

சூப்பர் ஸ்டாருக்கும் ஷோபனாவுக்கும் இடையேயான  காதலை… ஒரு பட்டாம்பூச்சி பறப்பது போல் மிக அழகாக கையாண்டிருப்பார் இயக்குனர்.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் எத்தனை படங்கள் வந்தாலும்… தளபதி படத்தின்…காதல்…அழகியல்.

இசைஞானி+மணிரத்னம்.இருவரும் 

நீள்ஆயுளும்,நிறை செல்வமுமாய் 

பல்லாண்டு வாழி.

இருவருக்கும் 

அன்பான அழகான இனிப்பான 

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . ..

என்றென்றும் அன்புடன்

ஆதிரைவேணுகோபால்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *