"இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' – KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!

Spread the love

‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக ‘ரீமேட்ச்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

KPY Bala - Rematch Movie
KPY Bala – Rematch Movie

‘ரீமேட்ச்’ பட பூஜையில் கலந்துகொண்ட பாலா, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “ஜினிமா மீடியா மற்றும் இந்தத் திரைப்படக் குழுவினருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழ்ல முதல் முதல்ல பேட்மிண்டன் ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க. நான் இந்த படத்தோட லீட் ஆக்ட்ரா இருக்கணும்னு என்கிட்ட கதை சொல்லியிருக்காங்க. இந்த படத்தில் நடிக்கிறது மிகவும் சந்தோஷமா இருக்கிறது.

KPY பாலா
KPY பாலா

கதை சொல்லும்போது நான் பேட்மிண்டன் பிளேயர்ன்னு அவங்களுக்குத் தெரியாது. எனக்கும் விளையாடி ரொம்ப நாள் ஆனதுனால எட்டு மாசம் பேட்மிண்டன் ட்ரெயின் பண்ணித்தான் இந்த படம் எடுக்கப் போறோம்.

செல் முருகன் அண்ணன்கூட எனக்கு இந்த படத்துல இணைந்து நடிக்கிறது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *