இதுலயும் தல தோனி தான் டாப்! ரூ.38 கோடி வரி அட்வான்சாக செலுத்தி அசத்தல் – Kumudam

Spread the love

2023-24 நிதியாண்டில் ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களை உள்ளடக்கிய மண்டலத்தில், அதிக வரி செலுத்திய தனிநபர் என்ற பெருமையை தோனி மீண்டும் பெற்றுள்ளார். வருமான வரித் துறையின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் தோனி சுமார் 38 கோடி ரூபாயை முன்கூட்டிய வரியாக செலுத்தியுள்ளதாக, வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர் சுதாகர் ராவ் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய ஆண்டிலும் அவர் இதே அளவிலான வரியைச் தோனி செலுத்தி இருந்தார். 

தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது மட்டுமின்றி, விவசாயம், விளையாட்டு உடைகள், உணவகங்கள் மற்றும் சினிமா தயாரிப்பு எனப் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை தோனி இதன் மூலம் நாட்டு மக்களுக்கு உணர்த்தி உள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *