“இது நியாயமான விமர்சனம் அல்ல, அசிங்கமான ட்ரோலிங்!” – நீதிமன்றத்தில் நாக சைதன்யா தரப்பு வழக்கறிஞர் ஆவேச வாதம். |Actor Naga Chaitanya approached the court against online defamation.

Spread the love

இணையதளங்களில் தனது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நடிகர் நாக சைதன்யா டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவைத் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, 2021-ல் விவாகரத்து செய்தார். அதைத் தொடர்ந்து நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் நாக சைதன்யா நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் முன்னிலையில் மே 29 அன்று விசாரணைக்கு வந்தது.

நாக சைதன்யா குடும்பம்

நாக சைதன்யா குடும்பம்

அப்போது நாக சைதன்யா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைபவ் கக்கர், “இணையத்தில் வெளியாகும் சில பதிவுகள், நாக சைதன்யா சமந்தாவை ஏமாற்றியதாகவும், அவரது திரையுலக வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் தவறாகச் சித்தரிக்கின்றன. இது வெறும் தனி நபர் மீதான Trolling தானே தவிர, நியாயமான விமர்சனம் கிடையாது.

மேலும், நடிகரின் அனுமதியின்றி அவரது தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் AI வீடியோக்கள் மற்றும் அநாகரீகமான உள்ளடக்கங்கள் அனுமதியற்ற வணிகப் பொருட்கள் மற்றும் இணையத்தில் உலா வரும் ஆபாசப் பொருட்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *