இந்தியன் 3 குறித்து வெளியான HOT UPDATE ! தாத்தா வராரு மீண்டும் கதற விட போறாரா ..? – Kumudam

Spread the love

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத நிலையில், அதன் அடுத்த பாகமான ‘இந்தியன் 3’ குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால், உண்மையில் இந்தப் படம் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த சூழலில், ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வெளியாகியுள்ள தகவல், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘இந்தியன் 3’க்கு மீண்டும் உயிர் கொடுத்த அப்டேட்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த இந்தப் படத்தின் நிலை குறித்து தற்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது.

1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம், ஊழலுக்கு எதிராக போராடும் சேனாபதி கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக ‘இந்தியன் 2’ உருவானது.

ஆனால், இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மூன்றாம் பாகம் தொடர்பான எதிர்பார்ப்பு ஓரளவு இருந்தாலும், அதற்கான பணிகள் குறித்து பெரிய அளவில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

‘இந்தியன் 3’தான் உண்மையான மையக்கதை?

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இறுதியில், அடுத்த பாகத்திற்கான கதைக்களம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக, சேனாபதியின் பின்னணியையும் அவரது குடும்ப வரலாற்றையும் மையமாகக் கொண்ட கதை அடுத்த பாகத்தில் விரிவடையும் வகையில் படம் முடிக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு , கமல் மேடை ஒன்றில் இந்தியன் 2 படம் குறித்து கூறுகையில் , உண்மையில் இந்தியன் 3 படம்தான் கதையின் மையம் ஆகும் .

ஆனால் நேரடியாக அந்த கதைக்குள் செல்ல முடியாமல் அதற்கு ஒரு கதை எழுதப்போய் திரைக்கதையும் , அளவும் கூடியதால் படத்தை மூன்று பாகங்களாக பிரித்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று விளக்கமளித்திருந்தார். .

சுஜாதா இல்லாத தாக்கம்… ஷங்கரின் திரைக்கதையில் ஏற்பட்ட மாற்றம்?

இந்தியன் படத்தில் இயக்குனர் சங்கரை எழுத்தாளர் சுஜாதா காப்பாற்றிவிட்டார் , ஆனால் சுஜாதாவின் மறைவு யாரை பாதித்ததோ இல்லையோ நிச்சயம் இயக்குனர் சங்கரின் படங்களை தொடர்ந்து பாதித்து கொண்டு வருகிறது .

அந்த வரிசையில் இந்தியன் 2 படம் பயங்கரமான விமர்சனங்களுக்கும் , ட்ரோலுக்கும் உள்ளாகி பிரபலமானது.அந்த விவாதத்தின் தொடர்ச்சியாகவே ‘இந்தியன் 2’ படத்தின் திரைக்கதையும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. .

‘தாத்தா வராரு…’ பாடலும் ட்ரோலான தருணங்களும்!

‘இந்தியன் 2’ படத்தைச் சுற்றி வெளியான பல்வேறு விமர்சனங்களில், அனிருத் இசையமைத்த பாடல்களும் பேசுபொருளாகின.

குறிப்பாக,படத்தில் இடம்பெறும் “தாத்தா வராரு கதறவிட போறாரு” என்று அனிருத் இசையமைத்த பாடல் படத்திற்கு பொருந்தாமல் படம் பார்க்க வந்த ஆடியன்ஸுக்கு பொருந்திப்போனதே படத்திற்கு BACKFIRE ஆகிப்போனது.

திரைப்படத்தை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களின் எதிர்வினைகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதால், அந்த பாடல் படத்திற்கு வெளியேயும் தனி கவனம் பெற்றது.

மூன்றாம் பாகத்தில் யார் யார்?

‘இந்தியன் 3’ படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட ‘இந்தியன் 2’ பட நடிகர்கள் மீண்டும் இடம்பெறுகின்றனர்.

கதையின் முக்கியமான பகுதி சேனாபதியின் தந்தையான வீரசேகரன் பாலராமை சுற்றி நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே படத்தின் இறுதிக்காட்சி மூலம் ஒரு முன்னோட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.

படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ரசிகர்களுக்கு உற்சாகமா? / பயத்துடன் கலந்த எதிர்பார்ப்பா ?

‘இந்தியன் 3’ பணிகள் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்ததை தொடர்ந்து, கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், ‘இந்தியன் 2’ படத்தின் அனுபவம் காரணமாக, மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் உருவாகியுள்ளன.

முதல் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, இரண்டாம் பாகத்தின் மீதான விமர்சனங்கள், மேலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் பாகத்தின் கதைக்களம் என அனைத்தும் சேர்ந்து ‘இந்தியன் 3’ படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள அப்டேட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 3’ மீண்டும் கவனம் பெறுவதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது.

இப்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான்… ‘இந்தியன் 3’ திரையரங்குக்கு வரும்போது, சேனாபதியின் அடுத்த அத்தியாயம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரப்போகிறது?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *