எ.வ.வேலு: “அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன்…” – லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஸ்டாலின்! | Stalin has criticized the Vigilance and Anti-Corruption Department raid on his X page.

Spread the love

கடந்த தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. அவர் அமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறையில் கமிஷன் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பணி நியமனத்திற்கும் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் என 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்.

சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.

ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *