“இந்தியாவில் அமைதியை உணரவில்லை” – தென்னாப்பிரிக்காவிற்குப் புறப்பட்டு சென்ற நடிகர் சஞ்சய் தத் | “No peace in India”: Actor Sanjay Dutt leaves for South Africa

Spread the love

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “‘இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை என்னால் உணர முடியாது. இந்தியர்கள் நாங்கள் பெரிய உள்ளம் கொண்டவர்கள்.

நாங்கள் விருந்தோம்பல் செய்கிறோம். நாங்கள் இவ்வளவோ கொடுத்துள்ளோம். நாங்கள் எப்போதும் அப்படியே இருக்க வேண்டும். அந்த நாட்கள் விரைவில் திரும்ப வர வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்திக்கிறேன். நான் காந்திஜியை உண்மையாகவே நம்புகிறேன். அவருடைய மூன்று குரங்குகள் எல்லோருக்கும் தெரியும்.

தீயதைக் காணாதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே. ஆனால் இன்று எனக்கு நான்காவது குரங்கு வேண்டும். யாராவது தவறாகப் பார்த்தால், அதை யார் திருத்துவார்கள்?” என்று குறிப்பிட்டு இருந்தார்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

சஞ்சய் தத் இந்தியாவில் அமைதியை உணரவில்லை என்று கூறியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கருத்துக்கு சஞ்சய் தத் விளக்கம் அளித்து இருந்தார்.

அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில், ”எந்தவொரு தனிநபர், சமூகம் அல்லது நிறுவனத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவது அல்லது அவமரியாதை செய்வது எனது நோக்கமல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனது கருத்துக்கள், ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட உரையாடலின் பின்னணியில் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும்.

முன்னா பாய் போன்ற படங்களில் காணப்படும் நகைச்சுவை மற்றும் நையாண்டி போன்றது, குறிப்பாக காதல், அரவணைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் சஞ்சய் தத் தென்னாப்பிரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் மும்பை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. அவர் சில நாட்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *