இந்திய பங்குச்சந்தை ஏன் சரிகிறது? நிப்டிக்கான முக்கிய லெவல்களை சொல்கிறார் நிபுணர்|Stock Market Crash Ahead? Expert Warns on Nifty Levels

Spread the love

கடந்த 4 வர்த்தக தினங்களாக, இந்திய பங்குச்சந்தை சரிவைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சந்தைக்கு ஏன் இந்தச் சரிவு, இது எப்போது சரியாகும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

“ஈரான் போர் முடிவுக்கு வரப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இந்தப் போர் நிறுத்தத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நெகட்டிவ் சிக்னல் உலக அளவிலான சந்தைகளுக்கு சரிவைத் தந்துள்ளது. அதன் பிரதிபலிப்பு தான் இந்திய சந்தையின் இறக்கம்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

மேலும், வெளியான காலாண்டு முடிவுகளும் பாசிட்டிவாக இல்லை.

23,300-க்கு கீழ் நிப்டி சென்றால், சந்தை வேகமாக விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், இந்த லெவலைத் தொட்டால், சந்தையை நாம் கவனமாக கையாள வேண்டும்.

23,500 வரை ரெசிஸ்டென்ஸ் லெவல் வைத்துக்கொள்ளலாம்.

ஈரான் போர் நிறுத்தக் குழப்பத்தால் இந்திய சந்தைகள் மட்டுமல்ல, ஆசிய சந்தைகள், அமெரிக்க சந்தைகளும் நிலையற்றத் தன்மையோடு இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *