இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

Spread the love

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது.

இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தால், விரைவில் 100-ஐ தொட்டுவிடும் என்கிற பயம் இருந்து வருகிறது. அதுவும் 2026-ம் ஆண்டிலேயே ரூ.100-ஐ தொட்டுவிடும் என்கிற பேச்சு இருந்து வருகிறது.

ஆனால், அப்படியெல்லாம் கிடையாது என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் நம்மிடம் பேசும்போது, “அடுத்த 6 மாதங்களில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.98 – 99 வரை செல்லலாம்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், பணவீக்கம் அதிகரித்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றினாலும் இது நடக்கும்” என்று கூறினார்.

நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96 வரை சென்றது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் தற்போது 96.50-க்கு கீழ் வர்த்தகம் ஆகி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு இந்திய ரூபாய் மதிப்பை இந்த ஆண்டு ரூ.100 வரை கொண்டு செல்லாது என்பதே நிபுணர்களின் நம்பிக்கை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *