இனி உங்கள் லேப்டாப்பே உங்களிடம் பேசும், யோசிக்கும்! Nvidia-வின் ‘AI PC’ | nvidia ai pc launch jensen huang new technology

Spread the love

இந்த தொழில்நுட்பப் புரட்சியில் டெல், ஹெச்பி, லெனோவா, ஏசஸ், மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ், எம்எஸ்ஐ போன்ற முன்னணி பிராண்டுகள் கைகோத்துள்ளன. விரைவில் ஏசர் மற்றும் ஜிகாபைட் நிறுவனங்களும் இந்த பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனமான கவுன்டர்பாயிண்ட் ரிசர்ச்-ன் இணை நிறுவனர் நீல் ஷா, “அடுத்த 10 ஆண்டுகளில் PC-க்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த அறிவிப்பு புரட்சிகரமாக மாற்றியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ‘AI சூப்பர் கம்ப்யூட்டர்’ இருக்கும் நிலையை இது உருவாக்கும்” என்று கூறியுள்ளார்.

எல்லாம் சரிதான், ஆனால் இதில் சில சிக்கல்களும் இருக்கின்றனவே? இந்த AI PC-க்களுக்கு சந்தையில் கலவையான வரவேற்பே கிடைத்துள்ளது. ஹெச்பி நிறுவனம் இதன் மூலம் தங்களது காலாண்டு விற்பனை அதிகரித்ததாகக் கூறினாலும், டெல் நிறுவனம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்று கூறியுள்ளது. முக்கியமாக, மைக்ரோசாப்ட் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், பிரைவசி குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. இதற்கு முன் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்திய ‘Cortana’ என்ற டிஜிட்டல் அசிஸ்டென்ட், பயனர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக எழுந்த புகார்களால் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.

Nvidia-வின் 'AI PC'

Nvidia-வின் ‘AI PC’

ஆனால், இந்த முறை பிரைவசி பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த AI ஏஜென்ட்கள் கிளவுடில் இயங்காமல், நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரிலேயே (locally) இயங்கும். இதனால், உங்கள் தகவல்கள் உங்கள் சாதனத்தை விட்டு வெளியே செல்ல வாய்ப்பில்லை.

இது குறித்து கிரேஸ் பீக் கேபிடல் நிறுவனர் ஸ்காட் ஸ்டீவன்ஸ் கூறுகையில், “Cortana போல உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் அணுகும் வசதியை அளிக்காமல், குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் AI-ஐ பயன்படுத்த அனுமதிப்பது பாதுகாப்பானது. இந்த புதிய அணுகுமுறை பயனர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்,” என்றார்.

இந்த அறிவிப்பு பங்குச்சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Nvidia, மைக்ரோசாப்ட், டெல் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்த நிலையில், அதன் போட்டியாளர்களான ஏஎம்டி மற்றும் இன்டெல் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. AI PC-க்கள் மட்டுமின்றி, டேட்டா சென்டர்களுக்கான CPU-க்கள் மற்றும் மனிதர்களைப் போன்ற ‘Isaac GR00T’ என்ற ஹியூமனாய்டு ரோபோவின் மாதிரி வடிவமைப்பையும் Nvidia இந்த மாநாட்டில் அறிமுகம் செய்து, தொழில்நுட்ப உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *