India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்றம் செய்ய அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான மசோதாவை அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில் புதிய பெயர் என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என்று மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.