இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம்…சவப்பெட்டிக்குள் திடீரென கண்விழித்த 15 வயது சிறுமி! – Kumudam

Spread the love

குவாத்தமாலாவின் கீச்சே மாகாணத்திலுள்ள எல்ஜோ கோட்டே கிராமத்தைச்சேர்ந்தவர் யுலெய்டி இக்ஸ்கோடோயாக் (15). கடந்த 10-ம் தேதி அதிகாலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை, தந்தை ஆபிரகாம் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றார். வழியில் சிறுமி சுயநினைவை இழந்ததாகவும், மூச்சும், நாடித் துடிப்பும் தனக்குத் தெரியவில்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார்.

மகள் இறந்துவிட்டதாகக் கருதிய அவர், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.

உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் வீட்டில் திரண்டிருந்தனர். சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு, சவப்பெட்டியின் மீது சாய்ந்து அழுதுகொண்டிருந்த தாய், உள்ளே அசைவு இருப்பதைக் கவனித்துள்ளார். பெட்டியைத் திறந்தபோது யுலெய்டி கண்விழித்து எழுந்து அமர்ந்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமி வெளியே வர உதவினர்; தண்ணீரும் கொடுத்தனர். அழுகை நிறைந்திருந்த வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவின. இந்தக் காட்சியின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

சம்பவத்துக்குப் பிறகு பேசிய யுலெய்டி, நெஞ்சில் கடுமையான வலியும், கனத்த உணர்வும் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மகளை  இழந்ததாக எண்ணிய குடும்பத்தினர், அவர் மீண்டும் உயிர்த்து வந்ததை கொண்டாடினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *