இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக் கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

Spread the love

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பூங்கா ஒன்றில், இந்திய மாம்பழங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பிரமாண்டமான “இலவச மாம்பழத் திருவிழா” அங்கிருந்த மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்து தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நிலவும் இந்திய மாம்பழங்களுக்கான தட்டுப்பாட்டிற்கு ஒரு ஜாலியான தீர்வாக இந்தத் தனித்துவமான மாம்பழ விருந்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

வெறும் 8 நண்பர்களுடன் ஒரு சிறிய பெட்டி மாம்பழங்களை வைத்துத் தொடங்கப்பட்ட இந்தச் சந்திப்பு, தற்போ நூற்றுக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஒரு மாபெரும் சமூகத் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

அங்கு இந்திய மாம்பழங்களின் வரத்து மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு பெட்டி மாம்பழத்தின் விலை மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவதாலும், இந்த இலவச மாம்பழ விருந்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் திருவிழாவிற்காக இந்தியாவின் பெருமைகளான அல்போன்சா, கேசர் மற்றும் சௌன்சா போன்ற சுவையான அசல் இந்திய மாம்பழ வகைகள் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டிருந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *