கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்களும், அவரை எதிர்த்து நின்ற இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட்டின் கூட்டணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளன.
எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால், இஸ்ரேலில் இன்னும் புதிய ஆட்சி அமையவில்லை. இதனால், தற்போதைக்கு நெதன்யாகுவே இஸ்ரேலின் பிரதமராகத் தொடர்கிறார்.

நெதன்யாகு, காடி ஐசன்காட் இருவரில் யார் அரபுக் கட்சிகளின் கூட்டணியைப் பெற்றாலும் ஆட்சி அமைத்துவிடலாம். நெதன்யாகுவிற்கு ஆதரவு தர அரபுக் கட்சிகள் விரும்பவில்லை. அவருமே அந்தக் கூட்டணியுடன் ஆட்சி அமைக்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.
அரபுக் கட்சிகள் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கின்றன. ஆனால், இவர்களின் ஆதரவைப் பெற்றால், இஸ்ரேல் மக்களின் அதிருப்தியையும், சொந்தக் கூட்டணிக்குள்ளேயே விரிசலைச் சந்திக்க நேரிடும் என்று காடி ஐசன்காட்ட் இந்த ஆப்ஷனை ஒதுக்கித் தள்ளிவிட்டார்.