தொடர்ந்து ஏறுமுகமாகும் தங்கம் விலை….இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – Kumudam

Spread the love

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தொடர்ந்து இரண்டு நாட்களாகவே தங்கம் விலை  உயர்ந்து வருவது நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், நேற்று (நவ.,02) சவரனுக்கு ரூ 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,02,200 க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராமுக்கு  ரூ.12,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *