தமிழ்நாட்டின் அரசியலில் பிரபலமான பேச்சாளர்களில் ஒருவராக அறியப்படுவர் நாஞ்சில் சம்பத். தனது மேடை பேச்சுகளில் தனக்கென்று தனி அடையாளத்தை கொண்டுள்ள இவர், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பேச்சாளராகப் பணியாற்றியுள்ளார். அரசியல் மேடைகளில் தனக்கென்று தனித்துவமான பேச்சாற்றலால் கவனம் பெற்ற நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து அக்கட்சியில் இணைந்தார்.
இந்த கட்சியில் இணைவதற்கு இதில் இளைஞர்களின் பலம் அதிகமாக இருப்பதால் இந்த கட்சியில் இணைந்தேன் என்று அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். கட்சியில் இணைந்த பின்பும் பரப்புரையாளராகவும், பேச்சாளராகவும் செயல்பட்டு வந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் தவெக வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இந்த கட்சியில் உள்ள பலருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளன.
முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், விஜயின் ஜோதிடராக குறிப்பிடப்படும் ரத்தன் பண்டிட்டுக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அது அரசியல் வட்டாரங்களில் மாபெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் அதன் பிறகு அந்த பதவி திரும்பபெறப்பட்டது.
இவ்வாறு கட்சிக்குள் பலருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பிரபலமான பேச்சாளரான நாஞ்சி சம்பத்துக்கு மட்டும் எந்தவொரு முக்கிய பதவியும் இதுவரை வழங்கதாதது நிலையில், இது அவருக்கு அதிருப்தி ஏற்படுத்திருக்கும் அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகள் எழுகின்றன.
தனியார் ஊடகத்திற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பதில்,
இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத்திடம் ஒரு மாணவி, இது வரையும் தவெகவில் எந்த வொரு பதவியும் வழங்கப்பட வில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், “நான் விஜயை நம்பிச் செல்லவில்லை. இளைஞர்கள் அதிக அளவில் இருக்கக்கூடிய ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்பதால்தான் அங்கு சென்றேன்” எனத் தெரிவித்தார்.
நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பதில், அவர் தவெகவில் இணைந்ததற்கான காரணம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவந்தது. அதே நேரத்தில், கட்சியில் அவருக்கு இதுவரை முக்கியப் பொறுப்பு வழங்கப்படாதது குறித்த கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
நாஞ்சில் சம்பத்தின் வைரல் பதிவு
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “போனால் போகட்டும் போடா… இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா… என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது… என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது… என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது…” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவால் தவெகவில் தனக்கு உரிய அங்கீகாரம் அல்லது பதவி வழங்கப்படாததால் நாஞ்சில் சம்பத் அதிருப்தியில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், இதுவரைக்குமே நாஞ்சில் சம்பத்துக்கு மட்டும் எந்தவொரு பதவியும் வழங்காமல் இருப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்திருக்கலாம் என்று பலரும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் பதிவும் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியும் அவர் அதிருப்தியில் இருப்பது தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பதிவு தனிப்பட்ட கருத்தா அல்லது தவெகவில் நிலவும் அரசியல் சூழலைப் பிரதிபலிக்கிறதா என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது.

