ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது’ – பெண் ஊழியர்கள் போராட்டம்! | hindu visiting the Eiffel Tower caused female staff members to step aside has controversy.

Spread the love

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே “BAPS’ (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்றனர்.

அப்போது, அக்குழுவினர் செல்லும் பாதைகளில் பெண் ஊழியர்கள் யாரும் பணியில் இருக்கக் கூடாது என்றும், அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஈபிள் கோபுர நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண் ஊழியர்கள் போராட்டம்

பெண் ஊழியர்கள் போராட்டம்

இதன் அடிப்படையில் பெண் ஊழியர்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதி டயான் டாவோய்ன் குற்றம்சாட்டியுள்ளார். பாலின பாகுபாட்டை வெளிப்படுத்தும் இந்தச் சம்பவத்திற்குப் பிரான்ஸ் நாட்டின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரெஞ்சு தேசிய சட்டமன்றத் தலைவர் யேல் பிரவுன்-பிவெட் தனது எக்ஸ் பக்கத்தில், “வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காகப் பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *