ஈரநிலத்தில் டிராக்டர் ஓட்டிய விஜய்! ஒரு வரப்பில் இருந்து மறு வரப்பிற்கு லாவகமாக சென்றார்! | CM drives tractor in wet land when he was in road show

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதியில் ரோடு ஷோ சென்றுக் கொண்டிருந்த முதல்வர் விஜய், ராமாபுரத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி டிராக்டரை லாவகமாக ஓட்டினார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து ஏற்கெனவே முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்துவிட்டார். இந்த நிலையில் தற்போது இன்றைய தினம் அவர் மதுராந்தகத்தில் 40 கிராமங்கள் வழியாக ரோடு ஷோ நிகழ்த்தி வருகிறார்.

Maduranthagam

இதற்காக அவர் மதியம் 2 மணிவாக்கில் மதுராந்தகத்திற்கு கார் மூலம் வந்தார். அங்கு அவருக்கு கட்சியினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து பிரச்சார வேனில் வேட்பாளர் மரகதம் குமரவேலையும் அழைத்துக் கொண்டு மாம்பாக்கத்தில் இருந்து ரோடு ஷோவை தொடங்கினார்.

வழியில் மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் அவர் வேனின் திறந்தவெளிக்கு வந்து மக்களுக்கு கையசைத்தார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பளித்தனர். அவருக்கு நிறைய பரிசுப் பொருட்களை அளித்தனர்.

அது போல் செங்கோல், வெள்ளி வாள் உள்ளிட்டவைகளை கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் விஜய்யுடன் மகன் ஜேசன் சஞ்சய் இருக்கும் புகைப்படத்தையும் அதில் சிக்மா என குறிப்பிடப்பட்டிருந்ததையும் அவருக்கு கொடுத்தனர்.

பின்னர் அவர் ஒரு டீக்கடைக்கு சென்று அங்கு டீ குடித்தார். அங்கிருந்த பெரியவர்களுடன் அமர்ந்து பேசினார். அப்போது அவர்களையும் டீக்குடிக்கிறீர்களா என கேட்டார். அங்கிருந்த மக்களுடன் கையசைத்தார். மேலும் இவர் செல்லும் இடங்களில் கிராம மக்களிடம் நலம் விசாரித்தார், குறைகளையும் கேட்டறிந்தார்.

அது போல் விஜய் ராமாபுரம் கிராமத்திற்கு சென்றார். அங்கு விவசாய டிராக்டரில் ஒருவர் உழுது கொண்டிருந்தார். அவரது விஜய்யை பார்த்ததும் கையசைத்து டிராக்டரை ஓட்டுகிறீர்களா என கேட்டார். விஜய்யும் ஓகே சொல்ல, ஆதவ், அந்த டிராக்டரை அருகே கொண்டு வாருங்கள் என்றார்.

இதையடுத்து அந்த விவசாயி டிராக்டரை விஜய் அருகே கொண்டு வந்தார். அப்போது கை கொடுத்ததும் விஜய், அந்த கையை பிடித்து ஏறி கொண்டார். பின்னால் நயீம் மூசாவும், பாதுகாப்பு அதிகாரியும் ஏறிக் கொண்டனர்.

விஜய்க்கு அந்த விவசாயி டிராக்டர் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். கார் ஓட்டுவதில் வல்லவரான விஜய் டிராக்டரை லாவகமாக ஓட்டினார். ஈரமான நிலத்தில் டிராக்டர் ஓட்டுவது கடினம் என்கிறார்கள், ஆனால் விஜய் முயற்சி செய்து டிராக்டரை சரிவர ஓட்டினார்.

பின்னர் ஒரு வரப்பில் இருந்து மறு வரப்பிற்கு டிராக்டரை கொண்டு சென்றார். அப்போது உயரமான வரப்பு என்பதால் டிராக்டர் சற்று ஆடியது. எனினும் அழகாக ஏற்றினார். அது போல் வயல் வெளியில் இருந்து சாலை பகுதிக்கும் டிராக்டரை கொண்டு வந்தார். அவர் அந்த விவசாயியிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *