உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்கிறது? கூகுளின் ‘ஆண்ட்ராய்டு ஹாலோ’ வந்தாச்சு! | Google Android Halo new AI feature update

Spread the love

கூகுள் நிறுவனம் தனது ஜெமினி (Gemini) AI மாடலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், “ஏஜென்டிக் AI’ (Agentic AI) மென்பொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், பயனர்கள் தங்கள் AI அசிஸ்டன்ட்களின் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணிக்க உதவும் வகையில், ‘ஆண்ட்ராய்டு ஹாலோ’ (Android Halo) என்ற புதிய அம்சத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. இனி உங்கள் போனில் AI என்ன வேலை செய்கிறது என்பதை நீங்கள் மறைவாக அல்ல, வெளிப்படையாகவே பார்க்கலாம்!

சரி, இந்த ஆண்ட்ராய்டு ஹாலோ எப்படி வேலை செய்கிறது?

இது அடிப்படையில் ஒரு மேம்பட்ட நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் போலவே செயல்படும். உங்கள் AI ஏஜென்ட் ஒரு பணியில் ஈடுபட்டிருக்கும்போது, லைவ் மோடில் செயல்படும்போது அல்லது உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பும்போது, உங்கள் போனின் டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் ஒரு சின்னம் மாதிரி தோன்றி அதன் நிலையைத் தெரிவிக்கும்.

கூகுள் இதை ‘சப்ட்டில் கம்யூனிகேஷன்’ (subtle communication) என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம், உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை ஒரே பார்வையில் நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். இது ரொம்பவே பிராக்டிக்கலான ஒரு விஷயம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *