“உதட்டு முத்தம் வேணும்”.. தாய்லாந்து பெண் யூடியூபரிடம் அத்துமீறிய டிரைவர்! இப்போ நிலைமையை பாருங்க | Lip Kiss Please: Rajasthan auto drier harasses Thailand woman youtuber during livestream

Spread the love

India

oi-Nantha Kumar R

ஜெய்ப்பூர்: தாய்லாந்தை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்திருந்தார். அங்கு அவர் ‘லைவ்’ வீடியோவில் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கே போன ஆட்டோ டிரைவர், ”முத்தம் வேண்டும்.. லிப்லாக் கிஸ் ஒன்னு வேண்டும் ப்ளீஸ்’ என கெஞ்சிய நிலையில் அந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

lip-kiss-please-rajasthan-auto-drier-harasses-thailand-woman-youtuber-during-livestream

ராஜஸ்தானில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் புகழ்பெற்ற அரண்மனைகள் மற்றும் ஏரிகள் உள்ளன. இதனை ரசிப்பதற்காக தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் வந்தார்.

உதய்ப்பூரில் மாநகராட்சி சார்பில் கலாசார நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சியை பெண் யூடியூபர் ரசித்தார். அந்த கண்காட்சி தொடர்பான தனது சமூக வலைதளத்தில் ‘லைவ்’ வீடியோவில் தெரிவித்து கொண்டிருந்தார்.

அப்போது கருப்பு டீசர்ட் மற்றும் கருப்பு தொப்பி அணிந்து ஒருவர் வந்தார். அப்போது அவர், ”போட்டோவா.. ப்ளீஸ் ஒரு கிஸ் கிடைக்குமா.. லிப் கிஸ்.. ப்ளீஸ்” என்றார். அதற்கு பெண் யூடியூபர், ‘நோ.. நோ” என்று கூறினார். ஆனால் அந்த நபர் விடவில்லை. ”ஒரு கிஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்று கெஞ்சினார். ஆனால் யூடியூபர் மறுத்துவிட்டார்.

இதனால் அந்த நபர், ”தேங்க்யூ’ என்று கூறி பெண் யூடியூபரிடம் கைக்கொடுத்துவிட்டு சென்றார். இந்த வீடியோவை பெண் யூடியூபர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனக்கு நேர்ந்த தொல்லை பற்றி குறிப்பிட்டு இருந்தார். இதுபற்றி சுராஜ்போல் போலீசார் தாமாகவே முன்வந்து விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையை தொடர்ந்து பெண் யூடியூபரிடம் முத்தம் கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் கமலேந்திர சிங் கூறுகையில், ”வெளிநாட்டு பெண் யூடியூபரிடம் முத்தம் கேட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் அப்தாப் என்ற கப்ரு. இவர் உதய்பூர் செக்டார் 11 பகுதியை சேர்ந்தவர்.

உதய்பூர் வந்த பெண் யூடியூபரை கடந்த 2 நாட்களாக அவர் உதய்பூரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். உதய்பூரை சுற்றிப்பார்க்க அவரது ஆட்டோவில் தான் வாடகைக்கு பெண் யூடியூபர் பயணித்தார். ஆனால் திடீரென்று ஆட்டோ டிரைவர், அவரிடம் முத்தம் கேட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 13ம் தேதி நடந்தது. உதய்பூர் டவுனுஹாலில் மாநகராட்சி நடக்கும் கண்காட்சியின்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *