“உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா எனக்கு அறிமுகமானார்!” – சித்ரா லக்ஷ்மணன் |”It was during the time I was working as assistant director I introduced to Bharathiraja” – Chitra Lakshmanan

Spread the love

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார்.

இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக் கலைஞரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலேயே ஒரு விருதினை வழங்கிட வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “70-களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா எனக்கு அறிமுகமானார்.

நான் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றிய பல படங்களில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

பாரதிராஜா

பாரதிராஜா

பத்திரிகையாளனாக படப்பிடிப்புத் தளங்களில் செய்தி சேகரிக்கச் சென்றபோதெல்லாம் அவருடன் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அப்போதே அவரிடம் ஒரு “ஸ்பார்க்’ இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், ஒரு காலகட்டத்திலே தமிழ் சினிமா உலகின் போக்கையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு இயக்குநராக அவர் இருக்கப் போகிறார் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அவரிடம் இருந்த திறமையை மிகச் சரியாகக் கணித்த தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, ’16 வயதினிலே’ படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு அளித்தது மட்டுமில்லாமல், சிவசமுத்திரத்திலே நடைபெற்ற அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பிலே ‘கே. பாலச்சந்தருக்கு நிகரான இயக்குநர் இவர்’ என்று பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாரதிராஜா முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற பெயரில் தன் இரண்டாவது படத்தை உருவாக்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *