ஊடகவியலாளரை திருமணம் செய்து கொண்ட ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா! |jk-cm-omar-abdullah-marries-nidhi-razdan-share-wedding-photos

Spread the love

கடந்த ஜூலை 31-ம் தேதி, உமர் அப்துல்லா மற்றும் அவரது முன்னாள் மனைவி பாயல் அப்துல்லா இடையே ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒன்றாகப் பணியாற்றிய போது சந்தித்துக் கொண்ட உமர் அப்துல்லா மற்றும் பாயல் ஆகிய இருவரும் கடந்த 1994-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Omar Abdullah - Nidhi Razdan

Omar Abdullah – Nidhi Razdan

இவர்களுக்கு ஜாஹிர் மற்றும் ஜமீர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு, தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக உமர் அப்துல்லா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவர்களது விவாகரத்து வழக்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் முடித்து வைத்தது. தற்போது நிதி ரஸ்தானை உமர் அப்துல்லா திருமணம் செய்து கொண்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *