“எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது” – இ.பி.எஸ் உடனான சமாதானம் பற்றி எஸ்.பி. வேலுமணி |eps-sp-velumani-meet-admk-both-factions-compromise

Spread the love

சமாதானம் ஆனது பற்றி பேட்டியளித்திருக்கும் வேலுமணி, “தகுதி நீக்கம் மனுவை இருவரும் கொடுத்திருந்தோம். அதனை வாபஸ் பெற்றிருக்கிறோம். எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுதான்.

அன்று முதல் எங்களுடைய பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார்தான் என சொல்லியிருந்தோம். அவரிடம் சில கோரிக்கைகளை வைத்திருந்தோம். ஒரு கட்சி என்றால் வெற்றி, தோல்வி சகஜம்தான்.

தோல்விக்கு பின்னிருக்கும் காரணங்களை ஆராய அவரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதற்கென குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அதனை அவரும் ஒவ்வொன்றாக செய்வதாக சொல்லியிருக்கிறார். எங்களுக்குள் வெறும் கருத்து வேறுபாடுதான்.

எடப்பாடி பழனிசாமி,  வேலுமணி

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

பிளவு கிடையாது. அதிமுக வலுவோடு செயல்படும். ஒற்றுமையாக நாங்கள் கட்சியை நடத்த வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி. இந்தக் கட்சி எங்களுடைய உயிர். பதவிக்காக ஆசைப்பட்டுதான் நாங்கள் இப்படி செய்தோம் என தவறான தகவல்கள் பரப்பட்டது.

தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது. அதிமுக அடுத்து வெற்றிகளை சந்திக்க வேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. அதிமுக ஒன்றுகூடி விட்டது. கருத்துவேறுபாடு சரி செய்யப்பட்டது. சிவி சண்முகம் எங்களோடு இருக்கிறார்.” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *