எல்-நினோ தாக்கம்… அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! பாதுகாத்துக்கொள்வது எப்படி?IInstances of heart attacks are increasing during summer

Spread the love

வீட்டிலும் ஜாக்கிரதை!

வீட்டுக்குள் இருந்தாலும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மின்விசிறி இல்லாத, காற்றோட்டம் இல்லாத, புழுக்கமான அறைகளில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தக்குழாய் அடைப்பு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சக்கரை நோய், உடல் பருமன், போன்றவையும் மாரடைப்புக்கு பங்களிக்கலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். காற்று மாசு, கோடையில் ஓசோனின் தாக்கம் போன்றவற்றாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், வெயிலில் அன்றாடம் வேலை செய்யக்கூடியவர்கள், ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் போன்றவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதய மருத்துவர் அஃப்ரீன் ஹாஜா மொய்தீன்

இதய மருத்துவர் அஃப்ரீன் ஹாஜா மொய்தீன்

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள்…

குறிப்பாக ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், இரண்டாம் நிலை தடுப்பு என்று சொல்லக்கூடிய “Secondary prevention’-ஐ சரியாகப் பின்பற்றவில்லை என்றால் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் உள்ளது. குறிப்பாக, வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை நிறுத்திவிட்டால் மூன்று மடங்கு ரிஸ்க். கோடை காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு மன உளைச்சலும் காரணமாகலாம். வெயில், வெப்பம் என்பதே எரிச்சல் தரும் விஷயம்தான். அதன் காரணமாக தூக்கம் கெட்டால் மன அழுத்தம் இன்னும் அதிகமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *