ஐபில் 2027 அப்டேட் , அணிகள் மாறும் ரிஷப் பண்ட் குல்தீப் யாதவ்  – Kumudam

Spread the love

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டை ரூ.27 கோடி என்ற மிக பிரம்மாண்டமான தொகைக்கு வாங்கி, லீக்கின் மிக விலையுயர்ந்த வீரராக மாற்றியது. கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணிக்காக பண்ட் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. 2025 சீசனில் வெறும் 269 ரன்களும், 2026 சீசனில் சற்று முன்னேற்றமடைந்து 312 ரன்களும் மட்டுமே எடுத்தார். பண்ட் தலைமையிலான லக்னோ அணி 2025 இல் 7-வது இடத்தையும், 2026 சீசனில் மிகவும் மோசமாக 10-வது (கடைசி) இடத்தையும் பிடித்து ரசிகர்களை ஏமாற்றியது. 

இந்தத் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, 2026 சீசன் முடிந்தவுடன் ரிஷப் பண்ட் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். மேலும், தான் மீண்டும் டெல்லி அணிக்கு மாற விரும்புவதாக லக்னோ நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். அதனை லக்னோ நிர்வாகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.இதனால் ரிஷ்ப் பண்ட் டெல்லி அணிக்கு செல்வது உறுதியாகி உள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தங்களின்படி, குல்தீப் யாதவ் அடுத்த சீசனில் இருந்து லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சை பலப்படுத்த உள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் ஐபிஎல் 2027 தொடரின் மீதான எதிர்பார்ப்பை தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் 2027-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் முன்கூட்டியே தொடங்க உள்ளதும் குறிப்பிடதக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *