ஐப்பசி 15-ம் தேதிக்குப் பிறகு அதிரடி மாற்றம்.. 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் கிடைக்குமா?” | Aippasi Masam Rasi Palan: Magaram, kumbam, meenam rasi to See Unexpected Luck, Financial Gains and Major Changes

Spread the love

Astrology

oi-Varaha

ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் எனப் பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்தக் காலகட்டத்தில் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசியினருக்கு சூரிய பகவான் இந்த மாதம் முழுவதும் நீச்சமாகி 10 ஆம் இடத்தில் அமரப் போகிறார். சூரியன் நீச்சமாவது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். எல்லாவற்றிலும் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். கடந்த 4 மாதங்களாக சிறு சிறு நன்மைகளைப் பெற்றிருப்பீர்கள். எதிர்பாராத சில இன்ப அதிர்ச்சிகள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும்.

ஐப்பசி மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத விஷயங்கள் கட்டாயம் நடக்கும். 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருந்த குரு பகவான் அதிசாரப் பெயர்ச்சியாகி 8 ஆம் இடத்திற்கு மாறுகிறார். அங்கிருந்து 2 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய ராகுவைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு, தன லாபம் உண்டாகும். பங்குச் சந்தையில் பணத்தை இழந்தவர்கள், ஆன்லைன் ஸ்கேமில் சிக்கி பணம் இழந்தவர்கள் எல்லாருக்கும் இழந்த பணங்கள் மீண்டும் வந்து சேரும்.

8 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் கேள யோகத்தில் குரு பகவான் கூடுவதால் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு திடீரென நல்லவை நடக்கும் யோகம் உண்டாகும். நல்ல மாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். கோபம் மிகவும் அதிகமாக இருக்கும். கணவன், மனைவி வகையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். மச்சான், மாமன் விஷயத்தில் கோபம் வரக்கூடிய அமைப்பு உள்ளது.

கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. வீண் வாக்குவாதம், சண்டைகளைத் தவிர்ப்பது மேன்மையை ஏற்படுத்தும். தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய நல்ல மாதமாக இருக்கும். நல்ல மாற்றங்கள், எதிர்பாராத மாற்றம் வரக்கூடிய மாதமாக இந்த ஐப்பசி மாதம் அமையும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசியினருக்கு மிகப்பெரிய நல்ல நன்மைகள் நடக்கக்கூடிய சுபமான மாதமாக இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். ஐப்பசி மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதிசாரா குருப்பெயர்ச்சியின் மூலம் 7 ஆம் இடத்திற்கு குரு பகாவன் மாறி ராசியைப் பார்க்கிறார். ஏற்கனவே தர்மகர்மாதிபதி யோகம் அமைப்பில் சுக்கிரனும், புதனும் வலுவாக இருக்கின்றனர்.

7 ஆம் அதிபதி இப்போது நீச்சபங்க ராஜயோக அமைப்பில் மாதம் முழுவதும் 9 ஆம் இடத்தில் இருப்பது என்கிற அமைப்பில் நல்ல கிரக சூழ்நிலைகள் உள்ளன. வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஏழரை சனி உங்களுக்கு முற்றிலும் விலகப் போகிறது. 2022, 2023, 2024 ஆம் ஆண்டு என கடந்த மூன்று ஆண்டுகளும் கும்ப ராசியினர் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ஜென்மசனியால் கடும் மன அழுத்தத்தில் இருந்திருப்பீர்கள்.

30 வயதுகளில் இருக்கக்கூடிய அனைவருக்கும் கடுமையான மன அழுத்தம், பணி அழுத்தம், பண நெருக்கடி, கடன், ஆரோக்கிய குறைபாடுகள், நெருங்கிய உறவினர் இழப்பு, நட்பு விரோதம், காதலில் தோல்வி போன்றவற்றில் சிக்கி இருப்பீர்கள். இந்த அமைப்புகள் எல்லாமே விலகக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். மன பலம் அதிகரிக்கும். தைரியம் கிடைக்கும்.

எல்லா விஷயத்திலும் தெளிவான சிந்தனை ஏற்படும். இந்த மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு ராசியை குரு பார்ப்பதால் அருமையான நல்ல அமைப்பு ஏற்படும். இழந்தவற்றை திரும்பப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். இழந்த பெயர், வாக்கு, பணம், மதிப்பு, மரியாதை போன்றவற்றை மீட்டெடுப்பீர்கள். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசியினருக்கு சுப மாற்றங்களைக் கொடுக்கக்கூடிய மாதமாக இந்த ஐப்பசி மாதம் அமையும். எதிர்பாராத நன்மைகள், அதிர்ஷ்டங்கள் உண்டாகும். 6 ஆம் அதிபதி 8 இல் மறைந்திருப்பதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். சூரியன் 8 இல் மறைந்து நீச்சபங்கமாவதால் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பாராத அறிமுகங்கள் கிடைக்கும்.

உடனடியாக நல்ல பலன்களைக் கொடுக்காவிடினும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நீங்கள் நன்றாக இருக்கக்கூடிய வகையில் நல்ல அமைப்புகளையும், ஆரம்பங்களையும் உருவாக்கும். பெளர்ணமி தினத்தின் அருகில் பிறந்தவர்களுக்கு பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. சிலருக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கும் அமைப்பு உள்ளது.

சிலருக்கு வேலை மாற்றங்கள் ஏற்படும். வேலை மாற்றத்தின் மூலமாக அல்லது ஏதாவது ஒரு வகையில் தூர இடங்களுக்கு வெளிமாநிலம், வெளிநாடு செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. அதிசார குருப்பெயர்ச்சி 6 ஆம் இடத்துக்கு மாறி 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புவோருக்கு அதில் இருந்த தடைகள் நீங்கும்.

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நிறைய நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படக் கூடிய நல்ல காலகட்டம். குடும்பம், தொழில், மனம், உடலில் இருந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீங்களே தீர்த்துக் கொள்ளக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *