படிப்பு ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும், “KYRO’ (Know Your Rights India) அப்படின்ற அமைப்பை 2020-ல தொடங்கி, வழக்கறிஞர்கள் குழுவுடன் இணைந்து, எளிய மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்க உதவினோம். சில நீதிபதிகளுடன் இணைந்து சட்ட விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தினோம். அதேபோல பொதுமக்கள், அவர்களுக்கான உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ள விழிப்பு உணர்வு நிகழச்சிகள் நடத்தினோம். இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர், AI மாதிரியான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் நோக்கிலும் பயிற்சி அளித்து வருகிறோம்.

இதுபோன்ற, சமூகப் பணிகள் மூலமா, ஜெர்மனியில CDU (கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன்) ஆதரவோட நடந்த தலைமைத்துவப் பயிற்சி திட்டத்துக்குத் தேர்வாகினேன். அதுக்கப்புறம் சமூகப் பணிக்கான ஃபெலோஷிப் திட்டத்துலயும் கலந்து கொண்டேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துல நடந்த “Service to Leadership” நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரா பணியாற்றினேன். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம், பிற நாடுகளில் உள்ள இந்திய தூதரக நிகழ்வுகள் எனப் பல சர்வதேச மேடைகள்ல இந்திய இளைஞர்களோட பங்களிப்பை பற்றி பேசுற வாய்ப்பு கிடைச்சது.