‘மையை வைத்துப் படியுங்கள், எழுதுங்கள்; அதை மனிதர்கள் மீது வீசி வீணடிக்காதீர்கள்’ என்று நேஹா போரா கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நடிகராக சக நடிகருக்கு சொல்கிறேன். சினிமாவில் ரவுடிகளைப் பயன்படுத்துவது, தடிஅடி நடத்துவது, பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகளில் நடித்தால் பெயரும், பணமும், வேலையும் கிடைக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழும் குரல்களை ஒடுக்க நினைப்பது சட்டவிரோதமானது.

கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் வன்முறையைக் கையாள்பவர்களைச் சமூகம் கோழைகள் என்றும் குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் என்றுமே கருதும். இதுபோன்ற மிரட்டல்கள் உங்களுக்குத்தான் அவப்பெயரைத் தரும். ஒரு பெருமைமிக்க நடிகனாக, சிந்தனைவாதியாகச் சொல்கிறேன், இனிமேலாவது இதுபோன்ற மலிவான செயல்களை நிறுத்துங்கள். தடை எதுவந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் உரைகளும், கேள்விகளும் தொடரும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். என்று அவர் உறுதியளித்துள்ளார்.