‘ஒரே திரைப்படம்’ என ட்ரம்ப்பின் தடைகளை ஈரான் அமைச்சர் விமர்சனம்|

Spread the love

கடந்த 19-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-ஐ அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க நேரப்படி இன்று (ஆகஸ்ட் 24), ஈரான் மீதான தடைகளை விளக்கமாக அறிவிக்க உள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்.

அமெரிக்காவின் இந்தத் தடை குறித்து நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் கேட்கப்பட்டுள்ளது.

இந்தக் கேள்விக்கு அவர், “பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்படும் இந்த அதிமுக்கியத் தடைகள் அனைத்துமே பழைய கதைதான்.

ஈரான் - அமெரிக்கா

ஈரான் – அமெரிக்கா

அமெரிக்கக் கொள்கைகளில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அதே அடாவடித்தனம்தான் இதுவும்.

சொல்லப்போனால், திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் ஒரே திரைப்படத்தைப் போலத்தான் இதுவும் இருக்கிறது.

இந்தத் திரைப்படம் மனப்பாடமாக எங்களுக்குத் தெரியும். அதை எப்படி எதிர்கொள்வது, எப்படி முறியடிப்பது என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

“ராணுவ நடவடிக்கை எடுப்போம்’, ‘அடிப்போம், அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று மிரட்டியவர்கள், இப்போது மீண்டும் பழைய திட்டங்களுக்கே திரும்புவது, அவர்கள் எந்த அளவிற்கு விரக்தியில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *